துருக்கியில் இன்று மீண்டும் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு..!
மத்திய கிழக்கு நாடான துருக்கியில் இன்று மீண்டும் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியமான தேர்தலாக பார்க்கப்படும் இந்தத் தேர்தலில், கடந்த 14-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதில் அந்நாட்டு சட்டப்படி போட்டியிட்ட வேட்பாளர்கள் யாருமே 50 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெறாததால் இன்று மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து 20 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் உள்ள அதிபர் தாயிப் எர்டோகனை எதிர்த்து, 6 எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக கெமால் கிலிக்டரொலு போட்டியிடுகிறார்.
Comments