நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி..!
நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாநில முதலமைச்சர்களும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இருக்கைகளில் இருந்து எழுந்துநின்று மோடி, மோடி என கோஷம் எழுப்பி, கைகளை தட்டி வரவேற்றனர்.
நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பை ஒட்டி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷுவுடன் இணைந்து சிறப்பு தபால் தலை மற்றும் 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
நாட்டின்75 ஆண்டுகள் சுதந்திரத்தை நினைவுகூறும் வகையிலும் தபால் தலையும், நாணயமும் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், புதிய நாடாளுமன்றத்தின் சிறப்புகள் மற்றும் செங்கோலின் பாரம்பரியத்தை எடுத்துக்கூறும் இரு குறும்படங்கள் ஒளிபரப்பட்டன.
Comments