புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் உம்மிடி பங்காரு செட்டி குடும்பத்தினர் பங்கேற்பு..!
மக்களவை தலைவர் இருக்கை அருகே இன்று நிறுவப்பட்ட செங்கோலை 1947ம் ஆண்டு உருவாக்கி அளித்த தமிழகத்தை சேர்ந்த உம்மிடி பங்காரு செட்டி நிறுவன குடும்பத்தினர் 15 பேர், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்ததை குறிக்கும் வகையில், அந்த செங்கோல் கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டனால், முதல் பிரதமராக பதவியேற்ற நேருவிடம் 1947ம் ஆண்டு அளிக்கப்பட்டது.
அந்த செங்கோலை உருவாக்கி அளித்த உம்மிடி பங்காரு செட்டி நிறுவன குடும்பத்தாரை கவுரவிக்க நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இதையேற்று, உம்மிடி பங்காரு செட்டி குடும்பத்தை சேர்ந்த 97 வயதாகும் உம்மிடி எத்திராஜ் உள்ளிட்ட 15 பேர் கலந்து கொண்டனர்.
Comments