நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழா - குடியரசுத் தலைவர் வாழ்த்து
நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவை ஒட்டி குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவரின் வாழ்த்து செய்திகளை நாடாளுமன்ற கட்டிடத்தில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் வாசித்தார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது வாழ்த்து செய்தியில், புதிய நாடாளுமன்றம் மாற்றத்தின் அலையை கொண்டு வரும் என்றும், அனைவருக்கும் இது பெருமையளிக்கும் தருணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், புதிய நாடாளுமன்றம் தற்சார்பு இந்தியாவை பிரதிபலிப்பதாகவும், பாரம்பரியத்தையும், நவீனத்தையும் ஒன்றிணைப்பதாகவும் கூறியுள்ளார்.
Comments