புதிய நாடாளுமன்றத்தை நோக்கி அமைதிப் பேரணி நடத்தும் முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை - மல்யுத்த வீரர்கள்!

0 1551

புதிய நாடாளுமன்றத்தை நோக்கி அமைதிப் பேரணி நடத்தும் முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களும் வீராங்கனைகளும் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்களை சந்தித்த பஜ்ரங் புனியா ,சாக்சி மாலிக், வினேஷ் போகட் ஆகியோர், புதிய நாடாளுமன்றத்தை நோக்கி அமைதிப் பேரணி நடத்தப் போவதாக தாங்கள் அறிவித்த பிறகு பேரணியை ரத்து செய்ய தங்களுக்கு மிகுந்த அழுத்தம் தரப்படுவதாக தெரிவித்தனர்.

மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷண், பல வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதற்காக அவரை கைது செய்ய வேண்டும் என்றும் மல்யுத்தவீரர்கள்- வீராங்கனைகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments