இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் புதிய நாடாளுமன்றம்..!
நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. செங்கோட்டையில் உள்ளது போன்ற சிவப்பு மற்றும் வெள்ளை மணற்கற்கள், ராஜஸ்தானின் சர்மதுரா பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்டன.
நாக்பூரில் இருந்து தேக்கு மரங்களும், உதய்பூரில் இருந்து பச்சை நிற சலவைக் கற்களும், ராஜஸ்தானின் அம்பாஜியில் இருந்து வெள்ளை நிற சலவை கற்களும் கொண்டு வரப்பட்டன.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வைக்கப்பட்டுள்ள அசோக சக்கரம் இந்தூரில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. இப்படி ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை உள்வாங்கி, பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு வகையான பொருட்கள் கட்டுமானத்திலும், உட்புற அழகை மெருகேற்றுவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவை தவிர, தமிழ்நாட்டில் இருந்து பெறப்பட்ட தங்க செங்கோல் மக்களவையை அலங்கரிக்க உள்ளது.
Comments