வந்தே பாரத் - இந்திய ரயில்வேயின் பெருமை.. இரும்பு ரயிலாக மாறும் கதை..!

0 2218

தேசத்தின் பெருமை மிகு பொது போக்குவரத்தான ரயில்வேயில், சென்னை பெரம்பூர் ICF ல் தயாரிக்கப்பட்ட 21 வது வந்தே பாரத் ரயில் இணைக்கப்படவுள்ளது. வந்தே பாரத் ரயில் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் பொது போக்குவரத்தாக இந்தியன் ரயில்வே உள்ளது. நாடுமுழுவதும் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வழித்தடங்களில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிவேகமாக பயணம் செய்யும் வகையில்' 'வந்தே பாரத்' ராயில்சேவையை ரயில்வே துறை வழங்கி வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில்களை சென்னை பெரம்பூரில் உள்ள ICF எனப்படும் இருப்புப் பெட்டி தொழிற்சாலை உற்பத்தி செய்கிறது. இதுவரை 21 வந்தே பாரத் ரயில்களை இந்நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது.

வந்தே பாரத் ரயிலுக்கு தேவையான 90 விழுக்காடு பாகங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ரயிலின் அடிப்பாகம் முதலில் தேவையான அளவில் வடிவமைக்கப்படுகிறது, பின்னர் பக்கவாட்டு தடுப்புகளும், அதனை தொடர்ந்து மேல் மூடி உள்ளிட்ட பாகங்கள் உற்பத்தி செய்து இணைக்கப்பட்டு, பிறகு வண்ணம் பூசும் பணி நடைபெறுகிறது. இதன் பின்னர் தான் சக்கரங்கள் இணைக்கப்பட்டு பெட்டிக்குத் தேவையான இருக்கைகள், விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்தும் முடிந்து, பயன்பாட்டுக்காக வெளியே வரும் முன், முழு சோதனை நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறும் பெட்டிகள் மட்டும் சேவைக்கு அனுப்பப்படுகின்றன.

தற்போது இருக்கை வசதிகள் மட்டுமே கொண்டுள்ள வந்தே பாரத் ரயில்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதில் வெளிநாடுகளில் ரயில் போக்குவரத்தில் உள்ள நவீன வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு தண்டவாளத்தில் இரு ரயில்கள் எதிரெதிர் திசையில் வந்தாலும் மோதிக்கொள்ளாமல் விபத்தை தவிர்க்கும் தொழில்நுட்பம், பேரிடர் கால பாதுகாப்பு வசதி, பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், நவீன சொகுசு இருக்கை, ரயில் ஓட்டுனருடன் பயணிகள் பேசுவதற்கு கருவி, wifi internet இணைப்பு என விமானத்தில் உள்ள வசதிகள் வந்தே பாரத் ரயில்களில் ஏற்படுத்தப் பட்டுள்ளன.

வந்தே பாரத் ரயில்களுக்கு மக்களிடையே கிடைத்துள்ள அமோக வரவேற்பை தொடர்ந்து, படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகளை தயாரிக்க ICF திட்டமிட்டுள்ளது. இதே போல் 200 கிலோ மீட்டர் தொலைவுக்குள் பயன்படுத்தப்படும் பேசஞ்சர் ராயில்களுக்கு மாற்றாக 'வந்தே மெட்ரோ' ரயில்களும், 6000 நபர்கள் பயணிக்கும் வகையில் நவீன வசதிகள் கொண்ட 'வந்தே புறநகர்' ரயில்களும் உற்பத்தி செய்ய ICF திட்டமிட்டுள்ளது.

ஒரு வந்தே பாரத் ரயில் உற்பத்தி செய்வதற்கு 60 நாட்கள் செலவிடப்படுகின்றன. இதற்கான தொகை வரி இன்றி 108 கோடி ரூபாய் ஆகிறது. உலக நாடுகளுக்கு தேவையான ரயில் பெட்டிகளை இந்தியா ஏற்றுமதி செய்வது, இந்தியாவின் 75 வது சுதந்திர ஆண்டில் தனிப் பெருமையாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments