விசாரணைக்கு அழைக்கும் நபர்களை துன்புறுத்துவதை காவல்துறை தவிர்க்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
விசாரணைக்கு அழைக்கும் நபர்களை துன்புறுத்துவதை காவல்துறை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சேலம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும், விசாரணை என்ற பெயரில் தன்னை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிட கோரி சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரஜினி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதன் விசாரணையின்போது, காவல்துறை விசாரணையில் உயர்நீதிமன்றம் தலையிடுவது இல்லை என்றும், விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்கள் துன்புறுத்தப்பட்டதாக கவனதிற்கு கொண்டுவரப்பட்டால், நீதிமன்றம் கண்மூடி கொண்டிருக்காது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
விசாரணைக்கான சம்மன் எழுத்துப்பூர்வமாக அனுப்பப்பட வேண்டும், ஆஜராகும் தேதி, நேரத்தை குறிப்பிடவேண்டும், விசாரணை நடைமுறை காவல் நிலைய பதிவேட்டில் பதிவேற்ற செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி நீதிபதி வழக்கை முடித்துவைத்தார்.
Comments