மக்களின் குரலை எதிரொலிக்க 8 முதலமைச்சர்களும் தவறி விட்டதாக பாஜக விமர்சனம்..!
நிதி ஆயோக் நிர்வாகக் குழுவின் முக்கிய கூட்டத்தில் கலந்து கொண்டு, மக்களின் குரலை எதிரொலிக்க 8 மாநிலங்களின் முதலமைச்சர்களும் தவறி விட்டதாக பாஜக விமர்சித்துள்ளது.
நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் டெல்லி, கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப், தெலுங்கானா, மேற்குவங்கம்,பிகார், ஓடிசா ஆகிய 8 மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், நாட்டின் வளர்ச்சி மற்றும் திட்டமிடலுக்கு நிதி ஆயோக் முக்கியமானது என்றும், இன்றைய கூட்டத்தில் 100 விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு தீர்வு காணப்படவுள்ளதென்றும் குறிப்பிட்டார்.
8 முதலமைச்சர்கள் புறக்கணித்தது, அவர்கள் தங்கள் மாநில வளர்ச்சியை புறக்கணித்ததற்கு சமம் என்றும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். ஜப்பான் பயணம் சென்றுள்ளதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
Comments