2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது பற்றி பிரதமர் தலைமையில் ஆலோசனை

0 1540
2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது பற்றி பிரதமர் தலைமையில் ஆலோசனை

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 8ஆவது நிதி அயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.

2047ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது தொடர்பாக ஆலோசிக்க நடந்த கூட்டத்தில் உத்தர பிரதேசம், ஆந்திரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களும், மத்திய அமைச்சர்களும் பங்கேற்றனர்.

அதில், உட்கட்டமைப்பு, முதலீடுகள், சுகாதாரம், திறன் மேம்பாடு உள்ளிட்டவை தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், நாட்டின் வளர்ச்சியை அடுத்த 25 ஆண்டுகளுக்கு வேகப்படுத்துவது குறித்தும், அதற்கான வழிமுறைகளைத் திட்டமிடுவது பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments