வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது Arabsat BADR-8 செயற்கைக்கோள்..!

0 4732

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனாவரல் ஏவுதளத்திலிருந்து, ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் Arabsat BADR-8 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் முயற்சி, மோசமான வானிலை காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

4 ஆயிரத்து 500 கிலோ எடை கொண்ட BADR-8 செயற்கைக்கோள், பூமியிலிருந்து சுமார் 35 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது.

ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஆசியாவில் ஒளிபரப்பு, பிராட்பேண்ட் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்க இந்த செயற்கைகோள் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments