அமெரிக்காவை சேர்ந்த 12 வயது சிறுவன் 5 பட்டங்கள் பெற்று புதிய சாதனை

0 1787
அமெரிக்காவை சேர்ந்த 12 வயது சிறுவன் 5 பட்டங்கள் பெற்று புதிய சாதனை

அமெரிக்காவில் 12 வயதே ஆன குளோவில் ஹங் என்ற சிறுவன்,  5 பட்டங்கள் பெற்று, மிகச்சிறிய வயதில் அதிக பட்டம் பெற்ற  நபர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

கலிபோர்னியாவில் உள்ள புல்லர்டன் கல்லூரியில் பயிலும் அவர், வரலாறு, சமூக அறிவியல், சமூக நடத்தை மற்றும் சுய முன்னேற்றம், கலை மற்றும் மனித உணர்வுகள், அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய 5 பாடங்களில் பட்டங்கள் வாங்கியுள்ளார். அடுத்த ஆண்டு மேலும் ஒரு பட்டப்படிப்பை முடிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிறுவன் குளோவிஸ் ஹங், கடந்த 2020ம் ஆண்டு 13 வயதில் ஒருவர் பட்டம் பெற்றது தனக்கு உத்வேகத்தை அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments