சியுங் சாவ் தீவில் நடைபெற்ற வண்ணமயமான பன் திருவிழா... 60 அடி உயரத்திற்கு உருவாக்கப்பட்ட பன் கோபுரம்
ஹாங்காங்கின் சியுங் சாவ் தீவில் வண்ணமயமான பன் திருவிழா நடைபெற்றது.
60 அடி உயரத்திற்கு உருவாக்கப்பட்ட பன் கோபுரத்தில் ஏறிய 12 வீரர்கள், தங்களால் இயன்ற அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான பன்களை கோபுரத்திலிருந்து பறித்தனர்.
கோபுரத்தின் உச்சியில் உள்ள பன்னை வெற்றிகரமாக பறிக்கும் நபர், அவரின் குடும்பத்திற்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வருவார் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த பன் திருவிழா, கொரோனா காரணமாக 4 வருட இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டுதான் கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி சியுங் சாவ் தீவில் உள்ள வீதிகளில், வண்ணமயமான ஊர்வலங்கள் நடைபெற்றன. பாரம்பரிய இசையுடன் கூடிய சிங்க நடனங்கள் பார்த்தோரை வெகுவாக கவர்ந்தன.
Comments