கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம்

0 1434

கர்நாடகாவில் 24 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து, முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே. சிவக்குமாரும் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பதவியேற்றனர்.

அவர்களுடன் 8 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதைத்தொடர்ந்து, அமைச்சரைவையை விரிவாக்கம் செய்வது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வந்த நிலையில், அமைச்சர் பதவியை பெறுவதற்காக மூத்த தலைவர்கள் பலரும் டெல்லியில் முகாமிட்டிருந்தனர்.

ஆலோசனையில் முடிவு எட்டப்பட்டதை அடுத்து பெங்களூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மூத்த தலைவர்கள் ஹெச்.கே.

பாட்டீல், கிருஸ்ண பைரே கவுடா உள்ளிட்டோர் முதலமைச்சர் சித்தராமையா முன்னிலையில் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஒரே பெண் அமைச்சராக லட்சுமி ஆர்.ஹெப்பால்கர் பதவியேற்றார்.  அவர்களுக்கு ஆளுநர் கெலாட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments