ஜப்பானின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிபா மாகாணத்தில் இருந்து 50 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆகப் பதிவானது. இதன் தாக்கம் தலைநகர் டோக்கியோவில் கடுமையாக உணரப்பட்டதன் காரணமாக கட்டடங்கள் குலுங்கின.
இதையடுத்து ரயில் சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. மேலும், டோக்கியோவுக்கான சர்வதேச நுழைவாயிலான நரிட்டா விமான நிலையத்தில் ஓடுபாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
Comments