250 கிலோ வெடிகுண்டு கண்டுபிடிப்பு.. 2,500 பேர் வெளியேற்றம்.. போலந்தில் பதற்றம்..!
இரண்டாம் உலகப்போரின்போது வீசப்பட்ட வெடிக்காத குண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து போலந்தின் ரோக்ஸ்வா நகரிலிருந்து இரண்டாயிரத்து 500 பேர் வெளியேற்றப்பட்டனர்.
அங்குள்ள ரயில்வே பாலம் அருகே கட்டுமானப் பணிகள் நடைபெற்ற போது ஜெர்மன் விமானப்படையால் வீசப்பட்ட இந்த 250 கிலோ குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் அதனை செயலிழக்கச் செய்ய வேறொரு பகுதிக்கு எடுத்து சென்றனர்.
முன்னதாக அப்பகுதியில் வசித்த 2,500 பேர் பேருந்துகள் மூலம் வெளியேற்றப்பட்டனர்.
Comments