நீர்தேக்கத்தில் விழுந்த விலை உயர்ந்த செல்போனை மீட்க பல லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றிய அரசு ஊழியர்..!
நீர்தேக்கத்தில் விழுந்த விலை உயர்ந்த செல்போனை மீட்க, பல லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றிய அரசு ஊழியரின் விநோத செயல் அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில், கொயாலிபேடா பகுதியில் உணவுப்பொருள் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ராஜேஷ் விஷ்வாஸ் என்பவர், தனது நண்பர்களுடன் கெர்கட்டா பரல்கோட் நீர்த்தேக்கத்திற்கு சென்றுள்ளார். அப்போது, எதிர்பாரதவிதமாக ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள அவரது செல்போன் தவறி 15 அடி ஆழ நீரில் விழுந்ததாக கூறப்படுகிறது.
செல்போனை மீட்க நீர்பாசனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ராஜேஷ், 30 ஹெச்பி திறன் கொண்ட மோட்டாரை கொண்டு கடந்த 3 நாட்களாக பாசனத்திற்கு பயன்படும் பல லட்சம் லிட்டர் நீரை வெளியேற்றியுள்ளார்.
சுமார் 1,500 ஏக்கர் நிலத்திற்கு பயன்பட்டிருக்க வேண்டிய நீரை வெளியேற்றி, ஊழியர் செல்போனை மீட்டது குறித்து புகார் சென்ற நிலையில், விசாரணை நடத்தப்பட்டது. செல்போனில் முக்கிய அரசு தகவல்கள் இருந்ததாகவும், பாசனத்திற்கு பயன்படாத நீரையே தான் அனுமதி பெற்று வெளியேற்றியதாகவும் ராஜேஷ் விளக்கமளித்துள்ளார். இதனையடுத்து ராஜேஷை பணியிடை நீக்கம் செய்து கான்கர் (Kanker) மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
Comments