ஈரப்பத அளவு அதிகமாக இருந்ததால் நெல் கொள்முதல் செய்ய மறுப்பு.. ஊழியரை மிரட்டிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்..!
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில், நெல்லின் ஈரப்பத அளவு அதிகமாக இருந்ததால் கொள்முதல் செய்ய மறுத்த ஊழியரை, ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஒருமையில் பேசி தாக்க முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பேரண்டூர் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவரான துளசிராமன் என்பவர், ஊத்துக்கோட்டை அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்ய வந்துள்ளார்.
நெல்லின் ஈரப்பத அளவு 20 சதவீதத்திற்குள் இருக்க வேண்டுமென்ற பட்சத்தில், 23 சதவீதமாக இருந்ததால் ஊழியர்கள் நெல்லை கொள்முதல் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த துளசிராமன், பணியிலிருந்த ஊழியரை ஒருமையில் பேசி தாக்க முயன்றதோடு, ஊழியர் வீடியோ எடுத்த செல்போனை தட்டிவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஊழியர் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments