டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருடிய நபரை சுட்டு பிடித்த போலீசார்

0 3471

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடிய நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

குந்தலாடிப் பகுதியில் ரோந்துப்பணியில் இருந்த தனிப்பிரிவு போலீசார் ஷியாபுதின், அன்பழகன் ஆகியோர் அதிகாலை நேரத்தில் டாஸ்மாக் கடை திறந்திருந்ததையடுத்து, அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, இரண்டு பேர் கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்களை திருடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர்களை பிடிக்க முயற்சித்தபோது, கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் 2 போலீசாருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து தற்காப்புக்காக துப்பாக்கியால் காலில் சுட்டதில் ஒருவர் காயமடைந்த நிலையில், மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.

காயமடைந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர் பெயர் சாம்பார் மணி என்பதும், தப்பி ஓடியவரின் பெயர் ஜிம்மி என்பதும், 2 பேரும் தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சாம்பார் மணி மற்றும் தாக்குதலில் கையில் காயமடைந்த காவலர்கள் 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments