ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்ற 10 சதவீத கமிஷன் தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது..!
திருப்பூர் மாவட்டத்தில் 2ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற 10 சதவீத கமிஷன் தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
பெருமாநல்லூரைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் தன்னிடம் 30 லட்சம் ரூபாய்க்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் உள்ளதாகவும், அதற்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வேண்டும் என்றும், 10 சதவீதம் கமிஷன் தருவதாகவும் கூறி காளம்பாளையத்தைச் சேர்ந்த பைனான்சியர் சபரிநாதனை அணுகியுள்ளார்.
இதை நம்பிய சபரிநாதன் 500 ரூபாய் நோட்டுகளாக 30 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு ஜெயராமன் சொன்ன படி நேற்று பெருமாநல்லூரில் உள்ள சந்திரசேகர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த ஜெயராமன், சிவராமன் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் சபரிநாதனிடம் 30 லட்சம் ரூபாய்க்கான 500 ரூபாய் நோட்டுக்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் செல்வது போல் சென்று வேறு வழியாக வெளியேறி தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்த சபரிநாதன் அளித்த புகாரின் அடிப்படையில் 3பேரை கைது செய்த போலீசார் 17 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ரொக்கம், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Comments