சூயஸ் கால்வாய் பகுதியில் தரைதட்டிய கப்பல்.. பெரும் போராட்டத்துக்குப் பின் மீண்டும் நீரோட்டத்தில் விடப்பட்டது
எகிப்தின் சூயஸ் கால்வாய் பகுதியில் தரைதட்டி நின்ற ஹாங்காங் கப்பல் பெரும் போராட்டத்துக்குப் பின் மீண்டும் நீரோட்டத்தில் விடப்பட்டது.
623 அடி நீளமுள்ள சின் ஹாய் டோங் என்ற அந்த சரக்கு கப்பல், சவூதி அரேபியாவின் தூபா துறைமுகத்தில் இருந்து சென்று கொண்டிருந்தது.
சூயஸ் கால்வாய் வழியாக செல்கையில் திடீரென தரைதட்டவே, அதன் பின்னால் வந்த 4 கப்பல்கள் செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டன. இதையடுத்து 3 இழுவை படகுகள் வரவழைக்கப்பட்டு மீண்டும் அக்கப்பல் நீரோட்டத்தில் விடப்பட்டது.
கடந்த 2021ம் ஆண்டு தைவானின் எவர்கிரின் சரக்கு கப்பல் சுமார் ஒரு வார காலத்துக்கு தரைதட்டி நின்றதால் , சூயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தற்போது விரைந்து செயல்பட்டதால், அதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
Comments