இன்று டி.எம்.எஸ். நினைவு நாள்....!
கம்பீரமான குரலில் தெளிவான உச்சரிப்புடன் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவர் டி.எம்.சௌந்தர்ராஜன். உலகெங்கும் உள்ள தமிழர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்த பாடகர் டிஎம்எஸ்-சின் நினைவுநாளில், அவரைப் பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு இதோ உங்களுக்காக..
டிஎம்எஸ்-சின் பக்திச்சுவை ததும்பும் பாடல்களைக் கேட்காதோர் இருக்க முடியாது... இனிமையான குரலில் கேட்போரை லயிக்கச் செய்யும் குரல் டிஎம்எஸ் உடையது.
1950களில் மந்திரிகுமாரி படத்தில் எம்ஜிஆருக்கு அவர் பாடிய பாடல் திரையுலகினரைத் திரும்பிப் பார்க்கவைத்தது. அதன்பின்னர், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை 25 ஆண்டுகள் எம்ஜிஆர் நடித்த படங்களில் பெரும்பாலான பாடல்களைப் பாடியவர் டிஎம்எஸ்.
எம்ஜிஆருக்கு ஏற்ற வகையில் குரலை மாற்றிப் பாடிய டிஎம்எஸ், சிவாஜி ஏற்ற குரலிலும் பாடி ரசிகர்களைக் கவர்ந்தார்.
கண்ணதாசனும் வாலியும் டிஎம்.எஸ் குரலுக்கு ஏற்றவாறு வரிகளைப் எழுதினார்கள் என்றால் அது மிகையல்ல.
ஜி.ராமனாதன் தொடங்கி கே.வி.மகாதேவன், எம்.எஸ் விஸ்வநாதன், சங்கர் கணேஷ், இளையராஜா, டி.ராஜேந்தர் உள்பட பலரின் இசையில் பல ஆயிரம் பாடல்களை டி.எம்.எஸ் பாடினார்.
தமது 90 வது வயதில் 2013ம் ஆண்டில் இதே நாளில் டி.எம்.எஸ் மறைந்தார். ஆனால் அவர் குரலுக்கு முடிவே இல்லை.அது என்றும் மறையப் போவதும் இல்லை..
Comments