கள்ளக்குறிச்சி அருகே பட்டாணி வியாபாரி கொலை வழக்கில் அவரது பெண் தோழி கைது!

0 4263

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே பட்டாணி வியாபாரி ஆறுமுகம் என்பவர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் அவரது பெண் தோழி கைது செய்யப்பட்டுள்ளார்.

விருத்தாசலம் பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் இவர் விருத்தாசலம் நகர பகுதியில் பட்டாணி கடை நடத்தி வந்தார். இங்கு வந்து சென்ற 2 குழந்தைகளின் தாய் கவிதா என்பவருடன் ஆறுமுகத்துக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கவிதாவுக்கு ஆறுமுகத்தின் உறவினர் வைத்தி என்பவருடனும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை வைத்தி வீட்டிற்கு சென்று கண்டித்தபோது, ஆறுமுகத்தை  இருவரும் பெட்ரோல் ஊற்றி  எரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின்போது காயமடைந்த வைத்தி அளித்த வாக்குமூலம் அடிப்படையில் கவிதா சிறையில் அடைக்கப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments