தரையிறங்கியவுடன் மீண்டும் வானில் பறந்த இண்டிகோ விமானம்.. பயணிகள் பதற்றம்!

0 3109

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தரையிறங்கிய இண்டிகோ விமானம் உடனே மீண்டும் வானில் பறக்கத் தொடங்கியது.

இதனால் சில நிமிடங்களுக்கு விமானத்தில் இருந்த பயணிகள் குழப்பமடைந்தனர். திங்கள்கிழமை இரவு சுமார் 100 பயணிகளுடன் சண்டிகரிலிருந்து அகமதாபாத் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், சர்தார் படேல் சர்வதே விமான நிலையத்தின் ஓடுபாதையில் அன்றிரவு 8.45 மணியளவில் தரையிரங்கியது.

இரவு 9.15 மணிக்கு தரையிறங்க வேண்டிய அந்த விமானத்தில் இருந்த பயணிகள், விமானம் தரையிறங்கியதும் சட்டென்று திரும்பவும் பறக்க ஆரம்பித்ததால் குழப்பம் அடைந்தனர். விமானம் தரையிரங்குவதற்கான ஒப்புதல் கிடைக்காததால், சிறிது நேரத்திற்கு வானில் விமானத்தை பறக்கவிட்டு மீண்டும் சரியாக விமானத்தை விமானி தரையிறக்கியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணையை தொடங்கி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments