புதுச்சேரியில் உள்ள இந்தியன் வங்கியில் ரூ.2000 மாற்ற சென்றவரிடம் அதிகாரிகள் வாக்குவாதம்..!

0 21596

புதுச்சேரியில் உள்ள இந்தியன் வங்கியில் 2000 ரூபாய் மாற்ற சென்ற நபரிடம் அடையாள சான்று தருமாறு அதிகாரிகள் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பூராணாங் குப்பம் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில், வாடிக்கையாளர் ஒருவர் தம்மிடமிருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக சென்றுள்ளார்.

ஆனால் அங்கிருந்த வங்கி ஊழியர் மற்றும் வங்கியின் மேலாளர் அவரிடம் KYC எனப்படும் அடையாளச் சான்று அளித்தால் மட்டுமே 2 ஆயிரம் நோட்டுகளை மாற்றி தர முடியும் என திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

இதனால் வங்கி ஊழியர்களுக்கும் அந்த நபருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அந்த நபர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments