நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகளின் முடிவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி கண்டனம்

0 1375

நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகளின் முடிவு, ஜனநாயக நெறிமுறைகளையும் அரசியல் சாசன மரபுகளையும் அவமதிக்கும் செயல் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி கண்டனம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்பட 19 அரசியல் கட்சிகள் விழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

இதனை விமர்சித்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி,  ஊழல், மக்கள் எதிர்பார்ப்புகளை நிராகரித்தல், வாக்கு வங்கி அரசியல் போன்றவற்றில்தான் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments