உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் 'வந்தே பாரத் ரயில்' சேவை இன்று தொடக்கம்

0 1355

உத்தரகாண்ட் மாநிலத்தின் முதலாவது வந்தே பாரத் ரயிலை, பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

டேராடூன் - டெல்லி இடையிலான 314 கிலோமீட்டர் தூரத்தை நான்கு மணி நேரம் 45 நிமிடங்களில் புதிய வந்தே பாரத் ரயில் கடக்கும் என்றும், புதன்கிழமை தவிர வாரத்தின் ஆறு நாட்களும் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, டேராடூன் - டெல்லி வழித்தடத்தில் இயக்கப்படும் சதாப்தி என்ற விரைவு ரயில் 6 மணி நேரம் 10 நிமிடத்தில் கடந்து செல்கிறது. மற்ற மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் 5 ஆவது வந்தே பாரத் ரயில் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments