"நாடு முழுவதும் அனல் காற்று முடிவுக்கு வந்துவிட்டது" - இந்திய வானிலை ஆய்வு மையம் இனிப்பான தகவல்
நாடு முழுவதும் இன்றுடன் அனல் காற்று முடிவுக்கு வந்துவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய விஞ்ஞானி ஜெனாமணி, இன்று முதல் வெயிலின் தாக்கம் குறையத் தொடங்குமென்றும், வானம் மேக மூட்டத்துடன் காணப்படுமென்றும் கூறினார்.
ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, சண்டீகர் மாநிலங்களுக்கு சூறாவளி காற்று மற்றும் மழை அதிகம் பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடுத்திருப்பதாகவும், மலைப்பகுதிகளில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments