சம்பள பாக்கி குறித்து புகார் அளித்ததால் ஆத்திரம்... தொழிலாளியை கீழே தள்ளி காலால் எட்டி உதைத்து தாக்கிய பணியாளர்
கேரள மாநிலம் கண்ணூரில் 4 மாத சம்பள பாக்கியை தராதது குறித்து புகார் அளித்த வெளிமாநில தொழிலாளரை நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் கீழே தள்ளி தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கட்டுமான நிறுவனம் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் பையனூரில் சாலை அமைக்கும் பணியை செயல்படுத்தி வருகிறது. இப்பணியில் வெளிமாநில தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டுள்ள நிலையில், சம்பள பாக்கி குறித்து தொழிலாளர் ஒருவர் ஒப்பந்த நிறுவன தலைமை அலுவலகத்திற்கு புகார் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்தப் புகார் குறித்து தகவல் அறிந்த பையனூரில் செயல்பட்டு வரும் ஒப்பந்த நிறுவனத்தின் பணியாளர் புகார் கூறிய வெளிமாநில தொழிலாளியை காலால் எட்டி மிதித்தும், கன்னத்தில் அறைந்தும் தாக்கியுள்ளார். பணியாளரின் காலை பிடித்து தொழிலாளி கெஞ்சியும் அவர் தாக்குதலை நிறுத்தவில்லை.
தாக்குதல் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்படாத நிலையில், அத்தாக்குதலில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
Comments