சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம்
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ். வைத்தியநாதனை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.
8 மாதங்களாக அப்பதவியில் இருந்து வந்த நீதிபதி டி.ராஜா இன்றுடன் ஓய்வு பெறுவதையடுத்து, மூத்த நீதிபதியான எஸ்.வைத்தியநாதன் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், எஸ்.வைத்தியநாதன் தலைமை நீதிபதிகளுக்கான அலுவலக பணிகளை நாளை முதல் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.
எஸ். வைத்தியநாதன், கோவையில் கடந்த 1962ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி பிறந்தவர். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்த அவர், 1986ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கறிஞர் தொழிலை தொடங்கினார். 2013ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 2015 ஆண்டு நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதியுடன் அவர் பணி ஓய்வு பெறவுள்ளார்.
Comments