கோவில் திருவிழாவில் வாண வேடிக்கையின்போது ஏற்பட்ட விபத்து... 2 பேர் உயிரிழப்பு

0 2529

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த சி.பள்ளி பட்டியில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவில், வாண வேடிக்கையின் போது ஏற்பட்ட பட்டாசு விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

திருவிழாவில் நேற்று இரவு சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலையை டாடா ஏஸ் வாகனத்தில் வைத்து மக்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர். அதே வாகனத்தில் வாண வேடிக்கைக்காக அதிகளவில் பட்டாசுகளும் வைக்கப்பட்டிருந்தன.

வாகனத்தை அதே பகுதியை சேர்ந்த 26 வயதான ஓட்டுனர் ராகவேந்திரன் ஓட்டி சென்றார். இந்நிலையில் வாண வேடிக்கையின்போது பட்டாசு மின்கம்பத்தில் பட்டு டாடா ஏஸ் வாகனத்தின் மீது விழுந்தது.

இதில் டாடா ஏஸில் வைக்கப்பட்டிருந்த மொத்த பட்டாசுகளும் வெடித்து சிதறி வாகனம் தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் டாடா ஏஸ் வாகனத்தை ஓட்டிச் சென்ற ராகவேந்திரனும், அருகிலிருந்த ஆகாஷ் என்ற 7 வயது சிறுவனும் உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்து மொரப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments