புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவை புறக்கணிக்க 19 எதிர்க்கட்சிகள் முடிவு..!
புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவை புறக்கணிக்க போவதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
டெல்லியில் 970 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வருகிற 28ம் தேதி திறந்து வைக்கவுள்ளார்.
அக்கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முதான் திறக்க வேண்டும், பிரதமர் மோடி திறக்கக்கூடாதென வலியுறுத்தி காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் கட்சி, லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், மதிமுக, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட 19 கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.
அதில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறப்பது, அரசியல் சாசனத்துக்கு விரோதமான நடவடிக்கை எனவும், இது ஜனநாயகத்தின் மீது நேரடியாக தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல் எனவும் அக்கட்சிகள் விமர்சித்துள்ளன.
Comments