நள்ளிரவில் பட்டாகத்தியுடன் வந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்.. ஒருவர் படுகாயம்!

0 1904

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நள்ளிரவில் இளைஞர்கள் சிலர் பட்டா கத்தியுடன் வந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

புதுக்குப்பம் அருகே உள்ள புளியங்குடி கல்லறையில் நடைபெற்ற அடக்கத்தில் பங்கேற்ற சில இளைஞர்கள், மது மற்றும் கஞ்சா போதையில் தகராறு செய்துள்ளளனர். இதனை தட்டிக்கேட்ட ஆறுமுகம் மற்றும் அவது மகன் சீனிவாசன் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதையடுத்து பொதுமக்கள் சூழ்ந்ததால் அவர்கள் ஓட்டம் பிடித்தனர். பின்னர் மீண்டும் நள்ளிரவில் பட்டா கத்தியுடன் புளியங்குடி வந்த இளைஞர்கள், பொதுமக்களை  மிரட்டி தாக்கியதில் அப்பாஸ் என்பவர் காயமடைந்தார்.

இதையடுத்து இளைஞர்களில் 2 பேரை பிடித்த பொதுமக்கள், அவர்களை மரத்தில் கட்டி வைத்து, சாலைமறியலில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments