உக்ரைன் கடற்படை தினத்தை ஒட்டி, வீரர்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த ஜெலென்ஸ்கி..
உக்ரைனின் கிழக்கு போர் முனையில் ரஷ்ய படைகளை எதிர்த்து போரிடும் கடற்படையினரை, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
உக்ரைனின் கடற்படை தினத்தை ஒட்டி வீரர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அவர், கடற்படையில் உள்ள வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து, உக்ரைனின் பல்வேறு கடற்படை பிரிவுகளை பாராட்டும் விதமாக பட்டங்களையும் வழங்கிய ஜெலென்ஸ்கி, கடற்படைக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதாக உறுதியளித்தார்.
Comments