காவல் ஆணையரின் காரை எட்டி உதைத்து ரகளை செய்த நடிகை..! காதலனுடன் சேர்ந்து கைவரிசை

0 2001

காவல் ஆணையரின் காரை தனது காரால் மோதியதோடு, காலால் எட்டி உதைத்து ரகளை செய்ததாக விஷால் பட நாயகி மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

நடிகர் விஷாலுடன் வீரமே வாகை சூடும் படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் நடிகை டிம்பிள் ஹயாதி..!

கவர்ச்சியான நடிப்பால் தெலுங்கு ரசிகர்களை கிரங்கடித்து வரும் டிப்பிள் தனது வீரத்தை, ஹைதராபாத் மாநகர போக்குவரத்து காவல் ஆணையர் ராகுல் ஹெக்டே என்பவரிடம் காட்டியதால் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள ஜர்னலிஸ்ட் காலனி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் டிம்பிள் தனது காதலனுடன் வசித்து வருகின்றார்.

அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் காவல் ஆணையருடன், கார் பார்க்கிங் பகுதியில் கார்களை நிறுத்துவது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று இரவு டிம்பிள் ஹயாதியின் வருங்கால காதல் கணவர் டேவிட், டிம்பிளின் காரை, காவல் ஆணையர் ராகுல் ஹெக்டேவின் கார் மீது மோத விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காரில் இருந்து ஆவேசமாக இறங்கிச்சென்ற டிம்பிள், தனது பார்க்கிங்கில் உங்கள் காரை எப்படி நிறுத்தலாம் ? என்று கேட்டு , காவல் ஆணையரின் காரை காலால் எட்டி,எட்டி உதைத்ததாக கூறப்படுகின்றது.

சத்தம் கேட்டு வந்த போக்குவரத்து காவல் ஆணையர் ராகுல் ஹெக்டே, நடிகை டிம்பிள் ஹயாதியை சமாதானப்படுத்த முயன்றிருக்கிறார்.

அடங்க மறுத்த டிம்பிள் காரை எட்டி, எட்டி உதைத்ததுடன் அவரையும் வசைமாறி பொழிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக காவல் ஆணையர் ராகுல் ஹெக்டேவின் ஓட்டுனர் சேத்தன், ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் நடிகை டிம்பிள் ஹயாதி மீது புகார் அளித்திருக்கிறார்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் நடிகையை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு நடிகை தன்னுடைய வக்கீலுடன் ஆஜரானார்.

இந்த நிலையில் அதிகாரத்தை பயன்படுத்தி தவறுகளை மறைக்க இயலாது என்று நடிகை டிம்பிள் ஹயாதி ட்விட் செய்துள்ளார். ஆத்திரத்தால் ஆவேசமான டிம்பிள் தற்போது வழக்கில் சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments