நீண்டதூரம் சென்று தண்ணீர் கொண்டுவந்த தாய்.. கிணறு வெட்டி கொடுத்து தாயின் துயரைப் போக்கிய மகன்..

0 1418

மஹாராஷ்ட்ராவில் சுட்டெரிக்கும் வெயிலில் தனது தாய் நீண்ட தூரம் சென்று தண்ணீர் கொண்டு வருவதைப் பார்த்து வேதனை அடைந்த 14 வயது சிறுவன் ஒருவன், தனது வீட்டு முற்றத்தில் கிணறு வெட்டியுள்ளான்.

பால்கர் மாவட்டத்தில் உள்ள கெல்வே என்ற கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினத்தை சேர்ந்த பிரணவ் என்ற அந்த சிறுவன், தனி ஆளாக கிணறு வெட்டும் பணியில் ஈடுபட, நிலத்தில் இருந்த பெரிய கற்களை அகற்ற மட்டும், அவனது தந்தை உதவியுள்ளார்.

கிணற்றில் 20 அடி ஆழத்தில் தண்ணீர் வந்ததைப் பார்த்து பிரணவ் மகிழ்ச்சி அடைந்ததாக தந்தை தெரிவித்துள்ளார்.

பிரணவின் செயலை பாராட்டியுள்ள கெல்வே கிராமத் தலைவர், பிரணவ் வீட்டிற்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments