பிறப்பு - இறப்பு விவரம் வாக்காளர் பட்டியலுடன் இணைப்பு..? - அமித்ஷா
பிறப்பு, இறப்பு விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
டெல்லியில் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலக கட்டிட திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் அமித்ஷா, இதனை தெரிவித்தார்.
பிறப்பு சான்றிதழ் அடிப்படையில், ஒருவருக்கு 18 வயது நிறைவடைந்தவுடன், தேர்தல் ஆணையமே அவரைத் தொடர்பு கொண்டு வாக்காளர் அட்டையை வழங்கும் என்றும், ஒருவரின் மரணம் குறித்த தகவல் கிடைத்தவுடன், மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவாளர் மூலம் அந்நபரின் குடும்பத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, 15 நாட்களுக்குள் தகவலை உறுதி செய்து, உயிரிழந்தவரின் பெயரை தேர்தல் ஆணையமே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிடும் என்றும் அவர் கூறினார்.
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் சிறப்பான முறையில் பாதுகாக்கப்பட்டால், வளர்ச்சிப் பணிகளை முறையாகத் திட்டமிட முடியும் என்றும் அமித்ஷா குறிப்பிட்டார்.
Comments