வங்கிகளில் இன்று முதல் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் - ரிசர்வ் வங்கி!

0 2279

இன்று முதல் வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததையடுத்து டெல்லி உள்ளிட்ட நகரங்களில் வாடிக்கையாளர்களின் கூட்டத்தை சமாளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சிரமமின்றி மாற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்றும் நோட்டுகளை மாற்ற அவசரம் காட்ட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

செப்டம்பர் 30 வரை நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என்று சொன்ன போதும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று வணிகர்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments