கண்ணாமூச்சி விளையாடிய போது பால்கனியில் இருந்து விழுந்த சிறுவன் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

0 2787
கண்ணாமூச்சி விளையாடிய போது பால்கனியில் இருந்து விழுந்த சிறுவன் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் வீட்டில் கண்ணாமூச்சி விளையாடி கொண்டிருந்தபோது பால்கனியில் இருந்து தவறிவிழுந்து பலத்த காயமடைந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜீவா நகரை சேர்ந்த தேவா, மின்சார வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரும் இவரது மனைவியும் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் இவர்களது 10 வயது மகளான ஓவிய ஸ்ரீ மற்றும் 8 வயது மகனான சாய் ஆகியோர் அருகில் வசிக்கும் சிறுவர்களுடன் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடி உள்ளனர்.

அப்போது, இரண்டாவது மாடியின் பால்கனி ஜன்னல் கதவு திறந்து சாய் கீழே இறங்கிய போது நிலை தடுமாறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சிறுவனை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments