அரசு மருத்துவ கல்லூரியில் மாணவிகளுக்கு கொடுமை... மன்மத பேராசிரியர் சஸ்பெண்டு...! இனி பயமும் பதட்டமும் வேண்டாம்
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மயக்கயவியல் துறை உதவி பேராசிரியர் சையது சாகிர் உசேன் பாலியல் புகாரில் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள நிலையில் , பாலியல் தொந்தரவுக்குள்ளான மாணவிகள் மற்றும் பேராசிரியைகள் பயத்துடனும் , பதட்டத்துடனும் விசாரணைக்கு ஆஜராகி நடந்த கொடுமைகளை விவரித்ததாக விசாகா கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மயக்கயவியல் துறை உதவி பேராசிரியர் சையது சாகிர் உசேன் மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டுக்களை விசாரித்த விசாகா கமிட்டி தலைவர் மருத்துவர் தனலெட்சுமி விசாரணை குறித்து விவரித்தார். தனது விசாரணையில் ஆஜரான 18 மாணவிகள், ஒரு செவிலியர், இரு முதுநிலை மாணவிகள் மற்றும் இரு மருத்துவ பேராசிரியைகள் அனைவரும் மிகுந்த பயந்துடனும் , பதட்டத்துடன் கண்ணீர் மல்க தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை புகாராக தெரிவித்ததாக அவர் கூறினார்.
மயக்கயவியல் துறை உதவி பேராசிரியர் சையது சாகிர் உசேன் என்பவர் பணியில் இருந்தால் அவர் தொடர்புடைய துறைக்கு பயிற்சிக்கு செல்லவே அஞ்சுவதாக புகார் அளித்ததாகவும் விவரித்தார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலியல் ரீதியான புகார் பெறப்படுவது இதுதான் முதல் முறை என்றும் தெரிவித்த டீன் ரத்தினவேலு, விசாகா கமிட்டி கொடுத்த அறிக்கையின் படி மயக்கயவியல் துறை உதவி பேராசிரியர் சையது சாகிர் உசேன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Comments