மலையின் உச்சியிலிருந்து கீழ்நோக்கி சைக்கிள் ஓட்டும் போட்டி... 100 வீரர்கள் 3.6 கி.மீ தூரத்திற்கு சைக்கிள் ஓட்டி அசத்தல்
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் மலையின் உச்சியிலிருந்து கீழ்நோக்கி சைக்கிள் ஓட்டும் போட்டி நடத்தப்பட்டது. எல்பாஸ் நகரில் நடைபெற்ற போட்டியில் 100 வீரர்கள் பங்கேற்று தங்களது திறனை வெளிப்படுத்தினர்.
மலையிலிருந்து கீழே இறங்கும் வழியில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு தடைகளை தாண்டி வீரர்கள் பந்தய இலக்கை நோக்கி சைக்கிளை ஓட்டிச் சென்றனர். இதில், சிலர் கீழே விழுந்த போதும் ரசிகர்கள் ஆங்காங்கே இருந்து வீரர்களை உற்சாகப்படுத்தினர். பந்தய தூரமான சுமார் மூன்றரை கிலோ மீட்டர் தூரத்தை அந்நாட்டின் வீரர் பிராங்ளின் 6 நிமிடம் 2 வினாடிகளில் கடந்து வெற்றி பெற்றார்.
Comments