இரவு நேர பார்ட்டியில் இருந்து BMW காரில் திரும்பிய இளம்பெண்... அதிவேகமாக மோதியதில் இருசக்கர வாகன ஓட்டி பலி

0 2891
இரவு நேர பார்ட்டியில் இருந்து BMW காரில் திரும்பிய இளம்பெண்... அதிவேகமாக மோதியதில் இருசக்கர வாகன ஓட்டி பலி

டெல்லியில், இரவு நேர பார்ட்டியிலிருந்து திரும்பிய இளம்பெண், தனது பி.எம்.டபுள்யு காரை வேகமாக ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்தியதில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் உயிரிழந்தார்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அஜய் குப்தா, அதிகாலை 4 மணியளவில் மருந்து வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அவ்வழியாக பி.எம்.டபுள்யு காரில் வேகமாக வந்த இளம்பெண் ஜெனரேட்டர் ஒன்றின் மீது காரை மோதிவிட்டு, பின் அஜய் குப்தா மீதும் மோதினார்.

படுகாயமடைந்த அஜய் குப்தாவை அந்த பெண் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 28 வயது இளம்பெண்ணை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments