பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் காலமானார்

0 4132
பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் காலமானார்

உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் சரத்பாபு தனது 71வது வயதில் இயற்கை எய்தினார்.

நிழல் நிஜமாகிறது, உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ள சரத்பாபு, பல்வேறு மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

அவர் செய்துக் கொண்ட 2 திருமணங்களும் விவாகரத்தில் முடிந்ததால் ஹைதராபாத்திலுள்ள தனது தங்கை வீட்டில் வசித்து வந்தார். உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து பல உறுப்புகள் செயலிழந்ததால் சரத்பாபு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments