வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்,கே.பி.அன்பழகன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்..!
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மீது புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரை, சுகாதாரத்துறை அமைச்சராக சி.விஜயபாஸ்கர் இருந்த போது, தமது பெயரிலும், மனைவி மற்றும் உறவினர்கள் பெயரிலும் முறைகேடாக சொத்து சேர்த்ததாகக் கூறி தொடுக்கப்பட்ட வழக்கில் இந்த குற்றப்பாத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில் ராசி ப்ளு மெட்டல்ஸ், V Infrastructure உள்ளிட்ட நிறுவனங்களின் பெயரிலும், தனது குடும்பத்தினர் பெயரிலும் 35 கோடியே 79 லட்ச ரூபாய்க்கு சொத்து சேர்க்கப்பட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.
அதே காலகட்டத்தில் உயர்க்கல்வித்துறை அமைச்சராக இருந்து கே.பி. அன்பழகன், வருமானத்திற்கு அதிகமாக சுமார் 45 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்ததாகக் கூறி தருமபுரி குற்றவியல் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். கே.பி.அன்பழகன், தனது மனைவி மற்றும் குடும்பத்தினர் பெயரில் நிலம், தொழில் முதலீடு என சொத்துகள் சேர்த்துள்ளதாகவும், முறைகேடாக பெற்ற பணத்தை சரஸ்வதி பச்சியப்பன் கல்வி அறக்கட்டளைக்கு அனுப்பியதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
Comments