தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு.. உயிரிழந்தோர் உருவப்படத்திற்கு உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி..!
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி உயிரிழந்தவர்களின் உருவ படத்திற்கு தூத்துக்குடி பாத்திமா நகரில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் இதில் பங்கேற்றனர்.
நினைவுதினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்கங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி நகர்ப் பகுதியில் 53 டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் அடைக்கப்பட்டுள்ளன.
Comments