புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் ரூ.2,000 நோட்டுகள் செல்லும் - ஆர்.பி.ஐ.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற வரும் வாடிக்கையாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தரும்படி வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்த ரிசர்வ் வங்கி, நாளை முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் அதனை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்திருந்தது.
இதற்கான வழிகாட்டுதல்களை அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பியுள்ள ஆர்.பி.ஐ., கோடை காலத்தை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு இருக்கை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தருமாறு அறிவுறுத்தியுள்ளது. டெபாசிட் செய்யப்படும் 2,000 ரூபாய் நோட்டுகள் குறித்த தரவுகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் மாற்ற மக்கள் அவசரப்பட வேண்டாம் என ஆர்.பி.ஐ. ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவுறுதியுள்ளார். புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
Comments