ஜிம்பாப்வேயில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை!
ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் பல்வேறு குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர்.
தலைநகர் ஹராரேயில் உள்ள மத்திய சிறை மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலுள்ள சிறைச் சாலைகளிலிருந்து, சிறிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பெண்கள், வயது முதிர்ந்த மற்றும் ஊனமுற்ற கைதிகள் என மொத்தம் 4 ஆயிரத்து 270 பேர் விடுவிக்கப்பட்டனர்.
சிறைச் சாலைகளிலிருந்து வெளியே வந்த கைதிகள் அங்கு காத்திருந்த உறவினர்களுடன் பாட்டுப் பாடி நடனமாடி உற்சாமடைந்தனர்.
17 ஆயிரம் கைதிகள் வரை அடைக்கப்படும் சிறைகளில், வலுக்கட்டாயமாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளை அடைத்து வைத்தன் காரணமாக, கூட்டநெரிசலுடன் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு சுகாதார சீர்கேடு நிகழும் அபாயம் நேரிட்டதால், ஐந்து கைதிகளில் ஒருவரை பொது மன்னிப்பின் கீழ் அரசு விடுவித்தது.
Comments