மும்பையில் 3 நாள் ஜி 20 நாடுகளின் சுற்றுச்சூழல் செயற்குழுவின் மாநாடு தொடக்கம்..!
மும்பையில் 3 நாள் ஜி 20 நாடுகளின் சுற்றுச்சூழல் செயற்குழுவின் மாநாடு தொடங்கியுள்ளது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜி 20 உறுப்பு நாடுகளின் 100 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். உலக வர்த்தகம் மற்றும் முதலீடுகளைப் பெற இந்த மாநாடு விரிவான விவாதங்களை மேற்கொள்ள உள்ளது.
மாநாட்டைத் தொடர்ந்து ஜூஹூ கடற்கரையை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பானிபூரி உள்ளிட்ட மும்பையின் மரபான உணவுப் பொருள்களை உண்ணவும் கடற்கரை நடைபாதையில் நடக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து இன்று கடல் வர்த்தகம் சார்ந்த பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
Comments