போலி ஐ.எஸ்.ஐ முத்திரையுடன் இன்சுலேஷன் டேப் தயாரித்த 2 நிறுவனங்களுக்கு சீல்..!

0 2656

சென்னையில், ஆர்பிட் எலெக்ட்ரிக் ஒயர் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரையும், ஐ.எஸ்.ஐ முத்திரையையும் பயன்படுத்தி இன்சுலேஷன் டேப் தயாரித்து விற்பனை செய்த இரு நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

ஆர்பிட் நிறுவனத்தின் பெயரில் போலியான பொருட்கள் விற்கப்படுவதாக வந்த புகாரையடுத்து சென்னை சவுகார்பேட்டை மற்றும் தண்டையார்பேட்டை பகுதியில் இயங்கும் இருவேறு எலெக்ட்ரிக்கல் கடைகளில் இந்திய தர நிர்ணய அமைவன அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சோதனையில் பெட்டி பெட்டியாக இருந்த இன்சுலேஷன் டேப்புகள் ஆர்பிட் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டதும், அந்நிறுவனத்தின் லைசன்ஸ் எண், ஐ.எஸ்.ஐ முத்திரைகள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் தண்டையார்பேட்டையில் உள்ள SBRO டேப்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் சவுக்கார்பேட்டையில் உள்ள சீத்து ஆர்பிட் கேபிள்ஸ் ஆகிய இரு கடைகளுக்கும் சீல் வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments