''ரூ.2,000 நோட்டுகளை மாற்ற ஆவணங்கள் தேவையில்லை..'' - எஸ்.பி.ஐ. வங்கி..!
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற எவ்வித அடையாள ஆவணங்களும் தேவையில்லை என, எஸ்.பி.ஐ. வங்கி விளக்கமளித்துள்ளது.
புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்த ரிசர்வ் வங்கி, வரும் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் அதனை மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற எவ்வித படிவமும், அடையாள ஆவணமும் தேவையில்லை என எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி, நோட்டுக்களை மாற்றுவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளுமாறும், மேலாளர்களுக்கு அவ்வங்கி அறிவுறுத்தியுள்ளது.
Comments